ரிஷப் பண்ட் க்ளோவ்ஸில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை அகற்ற சொன்ன நடுவர்கள்!

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

ரிஷப் பண்ட் க்ளோவ்ஸில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை அகற்ற சொன்ன நடுவர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் கீப்பிங் கிளவுஸில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை (Tape) அகற்றுமாறு நடுவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பேரில் அதனை இந்திய கேப்டன் கோலி அகற்றினார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் லீட்ஸ் - ஹெட்டிங்கிலே மைதானத்தில் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 432 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் மலான் 70 ரன்கள் எடுத்து சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவர் கொடுத்த கேட்சை பண்ட் பிடித்திருந்தார். அது தான் சர்ச்சையானது.

பண்ட் வழக்கத்திற்கு மாறாக தனது கீப்பிங் கிளவுஸில் நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலை சேர்த்து டேப் அடித்திருந்தார். அதை கவனித்த நடுவர்கள் அதனை அகற்றுமாறு தெரிவித்தனர். போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த டேவிட் லாயிட் 'மலான் விளையாட மீண்டும் அழைக்கப்பட வேண்டும்' என சொல்லி இருந்தார்.

Comments
Comments

No Comments