ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி - இந்தியா புறக்கணிப்பு

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி - இந்தியா புறக்கணிப்பு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் புறக்கணித்தன.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஒரு மாதங்கள் கடந்தும் உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் வாழ்வாதாரம் முற்றிலுமாக மாறியுள்ளது. சுமார் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் போலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயியுள்ளன.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரைத் தடுக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில். உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. ரஷ்யா கொண்டு வந்த இந்த தீர்மானம் வெற்றி பெற 9 வாக்குகள் தேவை. இந்த நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 2 வாக்குகள்(ரஷ்யா, சீனா) மட்டுகள் பதிவாகின. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் தீர்மானத்தை புறக்கணித்தன. இதனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.

ரஷ்யாவின் தீர்மானம் குறித்து ஐ. நா.வுக்கான அமெரிக்க தூதர் தாமஸ் - கிரீன்ஃபீல்ட், 'உக்ரைனில் ரஷ்யா உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தின் உதவியைக் கேட்டு தீர்மானம் கொண்டு வந்துள்ள ரஷ்யாவை மன்னிக்க முடியாது. உக்ரைனில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகள் பற்றி ரஷ்யா கவலைப்படவில்லை. அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், சண்டையை நிறுத்திவிடுவார்கள்' என்று கூறினார்.

Comments
Comments

No Comments