துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில்.. தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில்.. தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

துபாயில் நடைபெற்று வரும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உலக எக்ஸ்போ கண்காட்சியில் இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது.

அதில் தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார். இன்றைய தினம் ஐக்கிய அமீரக அமைச்சர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யச் சாதகமாக உள்ள சூழ்நிலைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது உள்ள தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அதாவது தமிழ்நாட்டிற்கான அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Comments

No Comments