.jpg)
நாட்டில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்காக மறுகுடியமர்வு உள்ளிட்ட பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
எனினும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு, பயனாளிகளுக்கு வீடுகட்ட நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒரு வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கிறது. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக இதுவரை 4,51,050 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தபோது, மத்திய வீ'ட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர்கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
அதே போல, நவீனத் தொழில்நுட்பத்தில் தரமான வீடுகளை விரைந்து கட்ட பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத் துணைத் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத் துணைத் திட்டம், பலவித பருவநிலை மண்டலங்களில் பேரிடர்களைத் தாக்குபிடிக்கும் வகையில் கட்டிடப் பிளான்கள மற்றும் வடிவமைப்பை உருவாக்க உதவும்.
வீடுகளை விரைவாகவும், நிலையானதாகவும், மாசு ஏற்படுத்தாததாகவும், பேரிடரைத் தாங்கும் வகையிலுமான உலகளாவிய சிறந்த தொழில்நுட்பத்தை அடையாளம் காண உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்பம் சவால்-இந்தியா(ஜிஎச்டிசி-இந்தியா) என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், உலகம் முழுவதிலும் இருந்து 54 புதுமையான கட்டிடத் தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் 6 இடங்களில், ஜிஎச்டிசி-இந்தியா திட்டத்தின் கீழ் 6 தனித்துவமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 6 எளிய வீட்டு வசதித் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Tue May 31 2022 20:53:29