இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் மோடி அதிரடி முடிவு.?

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் மோடி அதிரடி முடிவு.?

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன் பின் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதற்கான மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான் தொற்று காரணமாக சீனாவில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மற்ற நாடுகளும் அச்சத்தில் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் குறைந்த பாதிப்புற்ற தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொற்று பரவல் வேகத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நான்காவது ஜூன் மாதம் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்து கூறியுள்ளனர்.

Comments




Comments

  • https://thepiratebay-gp.org/ https://1337x-gp.org/