ஆந்திரா : ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே திறப்பு !

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

ஆந்திரா : ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே திறப்பு !

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்ததையடுத்து தற்போது வழக்கமான முறையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டு இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகளை நடத்த ஆந்திரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில கல்வி அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் நேற்று (ஏப்ரல்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 4ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். இந்த முடிவானது தற்போதுள்ள கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குழந்தைகளை கோடைகால துயரத்தில் இருந்து காப்பாற்ற பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அம்மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும், இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் கூட, கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments




Comments

No Comments