ஏழு நாட்களுக்கு உரிய ஏழு தெய்வங்களை அறிந்துகொள்வீர்!

செய்தித் துளிகள்

மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார்.   |    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.   |    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது.   |    பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார்.   |    பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார்.   |    இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.   |    உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   |    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   |    நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.   |    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .   |   

Big breaking :

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தாங்கிக்கொண்டு உங்கள் அனைவரின் பேராதரவோடு 48 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!   |   

ஏழு நாட்களுக்கு உரிய ஏழு தெய்வங்களை அறிந்துகொள்வீர்!

இந்து நாள்காட்டியின் ஏழு நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏழு நாட்களுக்கு உரிய ஏழு தெய்வங்கள் உண்டு.

திங்கள் கிழமை அல்லது சோமவாரம் எனப்படும் வாரத்தின் முதல் நாள் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை இந்த நாளில் "ஓம் நமசிவாய "எனும் மந்திரம் கொண்டோ அல்லது மஹா மிருத்யுஞ்செய ஸ்தோத்திரத்தை சொல்லியோ வணங்கலாம். செவ்வாய்கிழமை அனுமருக்கான தினமாக கருதப்படுகிறது. மஹாராஷ்ட்ரா போன்ற வடஇந்திய பகுதிகளில் செவ்வாய் கிழமை விநாயகருக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. விநாயகரை மங்கள் கர்தா என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் 40 பத்திகளை கொண்ட அனுமன் சலிசா எனும் அனுமன் மந்திரத்தை சொல்லலாம். மற்றும் விநாயகரை வழிபடுவோர், அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம்.

புதன் கிழமை அல்லது புதுவாரம் எனப்படும் இந்நாள் கிருஷ்ணருக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் துளசி இலைகளை கிருஷ்ணருக்கு அர்பணித்து ஹரே கிருஷ்ண பஜனைகளை மேற்கொள்ளலாம். வட இந்தியாவில் ஒரு பழமொழி உண்டு, "புத் சப் காம் சுப்ப் "என்கிறார்கள் அதாவது இந்த நாளில் துவங்கும் காரியம் வெற்றியடையும் என்கிறார்கள். இதை தான் நம் வழக்கத்தில் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது " என்கிறோம். அடுத்து வியாழக்கிழமை ஒரு சிலர், இதனை பாபாவிற்கான நாளாகவும், கந்தனுக்கு உகந்த நாளாகவும் கருதுகின்றனர். சில இடங்களி அனுமரை வணங்குவதும் உண்டு. வெள்ளிக்கிழமை என்பது வாரத்தின் ஏழு நாட்களில் மிக மங்களமான நாள். இந்நாள் இலட்சுமி தேவிக்கு உகந்ததாகவும் இதர செல்வம், வளம், செள்பாக்கியம் ஆகியவற்றின் அம்சமாகவும் திகழ்கிறது. நல்ல காரியங்களை வெள்ளிக்கிழமைகளில் துவங்குவதை மிக நல்ல சகுனமாகவும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தை பிறப்பது மிக சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.

சனிக்கிழமை என்பது பெயரே உணர்த்துவதை போல சனிபகவானுக்கு அர்பணிக்கப்பட்ட தினமாகும். மேலும் இந்த நாள் அனுமரையும், விஷ்ணு பெருமானையும் வணங்க உகந்த தினமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் பரிகாரமாக நவகோள்களை வணங்கும் தினமாக இந்த நாள் கருதப்படுகிறது. அடுத்து ஞாயிற்றுகிழமை சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் பைரவரை வணங்கி வழிபடுவது சிறப்பானாதாக கருதப்படுகிறது. இதில் நாம் வணங்கி வழிபடும் தெய்வத்திற்கான விரதம் இருக்கும் நாளில், விரதம் இருப்பது வழக்கமாக இருக்கிறது.

Comments




Comments

No Comments