For Add & News related information... (WhatsApp only ) +918072043687
மேகதாது விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் கூறியுள்ளார். | நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். | வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதமும் உயருகிறது. | பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ஆம் தேதி முதல, அடுத்த மாதம் 19-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கூறியுள்ளார். | பெருநகர சென்னை பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சிஎம்டிஏ அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி தெரிவித்துள்ளார். | இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டுவென்டி – டுவென்டி கிரிக்கெட் போட்டித்தொடர் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது. | உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் கடந்த நிதியாண்டில் முதலிடம் பெற்றுள்ளதையடுத்து தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். | வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடப்பு பருவத்திற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. | நெல்லையில் காணாமல் போன ரூ 20 லட்சம் மதிப்பிலான 104 கைப்பேசிகளை நெல்லை மாநகர் காவல்துறை ஆணையர் திரு சந்தோஷ் குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார். | கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் . |
Tue May 31 2022 20:53:29